கிரிக்கெட்டின் பாரம்பரியமான மற்றும் பழமையான தொடர் ஆஷஸ். ஆஷஸ் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர். இங்கிலாந்து அணி உலக கோப்பையை விட ஆஷஸ் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.

அதிலும் இந்த முறை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியாக நடக்கவுள்ளதால் இரு அணிகளுமே ஆஷஸில் கடுமையாக மோதும். ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 

பர்மிங்காமில் நடக்கும் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களாக பர்ன்ஸ் மற்றும் ராய் இறங்கவுள்ளனர். மூன்றாம் வரிசையில் ரூட்டும், நான்காம் வரிசையில் ஜோ டென்லியும் இறங்கவுள்ளனர். 

ஆல்ரவுண்டர்களாக பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, வோக்ஸ் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பட்லர் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவருமே உள்ளனர். ஃபாஸ்ட் பவுலர்களாக ஆண்டர்சன் மற்றும் பிராட் ஆகிய இருவரும் எடுக்கப்பட்டுள்ளனர். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை. அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கழட்டிவிடப்பட்டுள்ளார். 

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட்(கேப்டன்), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, மொயின் அலி, வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன்.