Asianet News TamilAsianet News Tamil

ENG vs SA: முதல் டெஸ்ட்டில் சீட்டுக்கட்டாய் சரிந்த இங்கி., பேட்டிங் ஆர்டர்!இங்கி.,யின் மானத்தை காப்பாற்றிய மழை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.
 

england struggling in batting against south africa in first test lost 6 wickets for 116 runs
Author
London, First Published Aug 18, 2022, 2:44 PM IST

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால், இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்கின. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி முதலிடத்தை தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

இதையும் படிங்க - இந்திய அணியில் தொடர்ந்து கேப்டன்சி மாற்றம்..! பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்

லண்டன் லார்ட்ஸில் தொடங்கிய முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, கீகன் பீட்டர்சன், எய்டன் மார்க்ரம், ராசி வாண்டர் டசன், கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், மேட்டி பாட்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ்(5), ஜாக் க்ராவ்லி (9) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 

இதையும் படிங்க - பையன் பட்டைய கிளப்புறான்.. இந்திய ஃபாஸ்ட் பவுலரை கண்டு வியந்த க்ளென் மெக்ராத்..!

சீனியர் வீரர் ஜோ ரூட்(8), ஜானி பேர்ஸ்டோ(0), கேப்டன் பென் ஸ்டோக்ஸ்(20),  பென் ஃபோக்ஸ்(6) ஆகியோரும்  சொதப்பினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய ஆலி போப் அரைசதம் அடித்தார்.

31.4 ஓவரில் 116 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. 32 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டம் 32 ஓவருடன் முடிக்கப்பட்டது. 32 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் அடித்துள்ளது இங்கிலாந்து அணி. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. ஆலி போப் 61 ரன்களுடனும், அவருடன் ஸ்டூவர்ட் பிராடும் களத்தில் உள்ளனர்.

மழை பெய்யாமல் இருந்திருந்தால் இன்னும் சில ஓவர்களில் வெகு சொற்ப ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகியிருக்கும். மழையால் முதல் நாள் ஆட்டத்தில் தப்பியது இங்கிலாந்து அணி. ஆனால் 2ம் நாள் ஆட்டத்தில் பொறுப்புடன் ஆடி ஓரளவிற்காவது நல்ல ஸ்கோரை அடிக்க முயற்சிக்க வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios