டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! தூக்கி எறியப்பட்ட பேர்ஸ்டோ, ராய்
டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஜானி பேர்ஸ்டோ டி20 உலக கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று ஆருடம் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க - 3ம் வரிசையை விராட் கோலியிடமிருந்து தட்டிப்பறிக்கும் தரமான வீரர்..!
இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிவருகின்றன. எனவே டி20 உலக கோப்பையை வெல்ல போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோ காயம் காரணமாக இடம்பெறவில்லை. கோல்ஃப் விளையாடும்போது காயமடைந்ததால், ஜானி பேர்ஸ்டோ டி20 உலக கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.
இதையும் படிங்க - Asia Cup: இர்ஃபான் பதான் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்தார் ரவீந்திர ஜடேஜா..!
இங்கிலாந்து அணியின் மற்றொரு அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜேசன் ராயும் டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறவில்லை. ஜேசன் ராய் அண்மைக்காலமாக மோசமான ஃபார்மில் இருந்துவருவதால், அவரை அணியில் எடுக்கவில்லை.
டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஹாரி ப்ரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷீத், ஃபில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.
ரிசர்வ் வீரர்கள் - லியாம் டாவ்சன், ரிச்சர்ட் க்ளீசன், டைமல் மில்ஸ்.