இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி போட்டி நாளை நடக்கிறது. அதன்பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி ஆடவுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இயன் மோர்கன் தலைமையிலான ஒருநாள் அணியில் பேட்ஸ்மேன்கள் ஜானி பேர்ஸ்டோ, பட்லர், டாம் பாண்ட்டன், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், மொயின் அலி ஆகியோரும் ஸ்பின்னராக அடில் ரஷீத்தும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆர்ச்சர், மார்க் உட் ஆகியோரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு, தொடர் நாயகன் விருதை வென்ற டேவிட் வில்லிக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் கிடைகக்வில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளிலும் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. டேவிட் வில்லி தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை தொடர்ச்சியாக நிரூபித்துவருகிறார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டுவருகிறது.

ரிசர்வ் வீரர்களாக ஜோ டென்லியும் சகிப் மஹ்மூத்தும் எடுக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து ஒருநாள் அணி:

இயன் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, டாம் பாண்ட்டன், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், அடில் ரஷீத், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

ரிசர்வ் வீரர்கள்: ஜோ டென்லி, சகிப் மஹ்மூத்.