Asianet News TamilAsianet News Tamil

#ENGvsPAK இந்த மேட்ச்சுலயாவது ஜெயிக்கணும்.. இங்கிலாந்தின் முக்கியமான வீரர்களை டக் அவுட்டாக்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி மழையால் தாமதமாக தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் முக்கியமான 2 வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறினர். 
 

england lost 2 early wickets in second odi against pakistan
Author
London, First Published Jul 10, 2021, 5:55 PM IST

வழக்கமான வீரர்கள் இல்லாத இங்கிலாந்து அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, வெற்றி வேட்கையில் 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளது. லண்டன் லார்ட்ஸில் நடந்துவரும் இந்த போட்டி மழையால் தாமதமாக தொடங்கியது. அதனால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இங்கிலாந்து அணி:

ஃபில் சால்ட், டேவிட் மலான், ஜாக் க்ராவ்லி, ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜான் சிம்ப்சன்(விக்கெட் கீப்பர்), லெவிஸ் க்ரெகோரி, க்ரைக் ஓவர்டன், ப்ரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், மேட் பார்கின்சன்.

பாகிஸ்தான் அணி:

இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சௌத் ஷகீல், சொஹைப் மக்சூத், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரௌஃப்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவிட் மலான் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய ஜாக் க்ராவ்லி ஆகிய இருவரும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர். 

ஹசன் அலி டேவிட் மலானை டக் அவுட்டாக்க, ஷாஹீன் அஃப்ரிடி க்ராவ்லியை வீழ்த்தினார். 21 ரன்னுக்கு இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஃபில் சால்ட்டும் ஜேம்ஸ் வின்ஸும் இணைந்து ஆடிவருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios