Asianet News TamilAsianet News Tamil

இங்கிலாந்தின் கையில் இந்தியா, ஆஸ்திரேலியாவின் குடுமிகள்..!

ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறுவது இங்கிலாந்தின் கையில் உள்ளது.
 

england is the decider of second finalist of icc test championship
Author
Ahmedabad, First Published Feb 27, 2021, 10:30 PM IST

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் அணிகள், ஃபைனலில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அணிகள் பெறும் வெற்றி விகிதத்தின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், 70 சதவிகிதத்துடன் நியூசிலாந்து அணி ஏற்கனவே ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. இந்தியா இங்கிலாந்து இடையே நடந்துவரும் டெஸ்ட் தொடர் தான் ஃபைனலுக்கு முன்னேறும் 2வது அணியை தீர்மானிக்கும் தொடர். முதல் டெஸ்ட்டில் தோற்ற இந்திய அணி, 2 மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. 

3வது டெஸ்ட் வெற்றிக்கு பிறகு 71 சதவிகிதத்துடன் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி. ஆனாலும் கடைசி டெஸ்ட்டில் வெற்றியோ, டிராவோ செய்தால்தான் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறும். இங்கிலாந்து அணி ஃபைனல் வாய்ப்பை இழந்துவிட்டாலும், கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து ஜெயித்தால், ஆஸி., அணி ஃபைனலுக்கு முன்னேறும்.  இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் தோற்றால், புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு வந்துவிடும். நியூசிலாந்து முதலிடத்திற்கும், ஆஸ்திரேலிய அணி 2ம் இடத்திற்கும் முன்னேறி, இரு அணிகளும் இறுதி போட்டியில் மோதும். இந்திய அணி ஜெயித்துவிட்டாலோ, டிரா செய்தாலோ, இந்தியாவும் நியூசிலாந்தும் ஃபைனலில் மோதும்.

எனவே ஃபைனலுக்கு முன்னேறுவது இந்தியாவா அல்லது ஆஸ்திரேலியாவா என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இங்கிலாந்து திகழ்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios