Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து 5-0 என இந்திய அணி வெல்லும்.! அடித்துக்கூறும் பனேசர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து 5-0 என இந்திய அணி வெல்ல வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

england former cricketer monty panesar predicts india will whitewash england in test series
Author
England, First Published May 22, 2021, 4:20 PM IST

இந்திய அணி வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பெரிதாக சாதித்ததில்லை. 2007ல் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன்பின்னர் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் வெல்லவே இல்லை. கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்றபோதும் டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணி.

அண்மையில் இந்தியாவில் வைத்து இங்கிலாந்தை 3-1 என டெஸ்ட் தொடரில் வீழ்த்திய இந்திய அணி, அதே தன்னம்பிக்கையுடன், கிட்டத்தட்ட அதே அணியுடன் ஆடும் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலும் வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் இந்த டெஸ்ட் தொடர் நடக்கும் காலக்கட்டம் கோடைகாலம் என்பதால், இங்கிலாந்து கண்டிஷன் இந்திய ஸ்பின்னர்களுக்கு உதவும் என்றும், அதனால் இங்கிலாந்தை 5-0 என ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.

england former cricketer monty panesar predicts india will whitewash england in test series

இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகிய அனுபவம் வாய்ந்த சீனியர் டாப் ஸ்பின்னர்களுடன், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய தரமான ஸ்பின்னர்களும் உள்ளனர். அண்மையில் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அக்ஸர் படேல் அசத்தியிருந்தார். அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் மிகவும் அனுபவம் வாய்ந்த உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள். எனவே இங்கிலாந்து கண்டிஷன் ஸ்பின்னிற்கு ஒத்துழைத்தால் பனேசர் கூறியதை போல, இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் இங்கிலாந்தின் சீம் கண்டிஷனில் 5-0 என்பது வாய்ப்பில்லாதது.

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

கேஎல் ராகுல், ரிதிமான் சஹா.(உடற்தகுதி கண்காணிக்கப்படுகிறது)

ஸ்டாண்ட்பை வீரர்கள் - அபிமன்யூ ஈஸ்வரன், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஸான் நாக்வஸ்வாலா
 

Follow Us:
Download App:
  • android
  • ios