ENG vs IND: எதிரணி எதுவா இருந்தா என்ன..? டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியை எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, இந்த டெஸ்ட் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து கூறியிருக்கிறார்.
இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்தன. அதில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல
ஒத்திவைக்கப்பட்ட அந்த கடைசி டெஸ்ட் போட்டி இந்திய அணியின் தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி; இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.
இந்த முறை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா; இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இரு அணிகளின் கேப்டன்கள் மட்டுமல்லாது, மொத்த அணி சூழலே மாறியிருக்கிறது என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.
இதையும் படிங்க - இப்ப மட்டுமில்ல; இனி எப்பவுமே அவன் கேப்டனாக முடியாது.. மோசமான கேப்டன்! ரோஹித் இல்லைனா அவருதான் கேப்டன்
கடந்த ஆண்டு இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, சொந்த மண்ணில் 2 தோல்விகளை சந்தித்தது இங்கிலாந்து அணி. ஆனால் பிரண்டன் மெக்கல்லமின் பயிற்சியில் பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் நியூசிலாந்தை டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்து 3-0 என இங்கிலாந்து வென்றுள்ளது.
இதையும் படிங்க - IRE vs IND: விதியின் விளைவால் ஓபனிங்கில் வாய்ப்பு பெறும் திறமையான வீரர்..! இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
அதே உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் இந்தியாவை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. இந்நிலையில், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், எதிரணியை பற்றியெல்லாம் யோசிக்காமல், வெற்றி என்ற ஒரே மனநிலையில் தான் நாங்கள் ஆடுகிறோம். இந்தியாவை எதிர்கொள்வது முழுக்க முழுக்க வித்தியாசமானது. நாங்கள் கடந்த தொடரில் நன்றாக ஆடியிருக்கிறோம். அதே சிறந்த ஆட்டத்தை இந்தியாவிற்கு எதிராகவும் ஆடுவோம் என்று பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.