Asianet News TamilAsianet News Tamil

வார்னரின் போராட்டம் வீண்.. டி20 உலக கோப்பைக்கு முன் ஆஸி., மண்ணில் ஆஸி.,யை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

england beat australia by 8 runs in first t20
Author
First Published Oct 9, 2022, 6:15 PM IST

டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. டி20 உலக கோப்பைக்கு இந்த தொடர் அந்த 2 அணிகளுக்கும் மிகச்சிறந்த முன் தயாரிப்பாக இருக்கும். பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, அதே உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ளது இங்கிலாந்து அணி.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று பெர்த்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், நேதன் எல்லிஸ், கேன் ரிச்சர்ட்ஸன், மிட்செல் ஸ்வெப்சன்.

இதையும் படிங்க - ஹென்ரிக்ஸ், மார்க்ரம் அபார அரைசதம்! டெத் ஓவர்களில் கோட்டைவிட்ட தென்னாப்பிரிக்கா.. இந்தியாவிற்கு சவாலான இலக்கு

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முழு ஃபிட்னெஸுடன் இந்த தொடரில் ஆடுகிறார்.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி, மார்க் உட்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் இருவருமே அரைசதம் அடித்து, அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 11.2 ஓவரில் 132 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பட்லர் 32 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர், ஒருமுனையில் பென் ஸ்டோக்ஸ்(9), ஹாரி ப்ரூக்(12), மொயின் அலி (10), சாம் கரன்(2) என மிடில் ஆர்டர் வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, மறுமுனையில் அடித்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 51 பந்தில் 84 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 20 ஓவரில் 208 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

209 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய மிட்செல் மார்ஷ் அடித்து ஆடி 26 பந்தில் 36 ரன்கள் அடித்தார். கேப்டன் ஆரோன் ஃபின்ச் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், கடந்த போட்டியை போலவே இந்த போட்டியில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் அரைசதம் அடித்தார். 4வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 15 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்களை விளாசினார். ஆனால் அவரது அதிரடி பேட்டிங்கை இன்னும் சற்று நேரம் தொடராமல் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்ற நிலையில், 44 பந்தில் 73 ரன்களை குவித்த வார்னரும் 17வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடாதீங்க.. இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்

அதன்பின்னர் மேத்யூ வேட் 15 பந்தில் 21 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் 3வது பந்தில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 200 ரன்கல் அடித்த ஆஸ்திரேலிய அணி, 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டி20 உலக கோப்பை நடக்கும் ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த டி20 வெற்றி இங்கிலாந்துக்கு மிகுந்த உத்வேகத்தையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios