ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு..! பேர்ஸ்டோ கம்பேக்.. ஆர்ச்சருக்கு இடம் இல்லை
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடர் ஆஷஸ். உலக கோப்பைக்கு நிகராக இந்த 2 அணிகளாலும் மதிக்கப்படும் தொடர் ஆஷஸ். ஆஷஸ் தொடரை வெல்வது அந்த அணிக்கு உலக கோப்பைக்கு வெல்வதற்கு நிகர்.
இந்த ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் ஜூன் 16 முதல் ஜூலை 31ம் தேதி வரை நடக்கிறது.
முதல் போட்டி பிர்மிங்காமிலும், 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸிலும், 3வது டெஸ்ட் லீட்ஸிலும், 4வது டெஸ்ட் மான்செஸ்டரிலும், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலிலும் நடக்கின்றன.
IPL 2023: உம்ரான் மாலிக்கை ஆடும் லெவனில் எடுக்காதது ஏன்..? பிரயன் லாரா விளக்கம்
இந்த டெஸ்ட் தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி, லண்டன் ஓவலில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளும் தயாராகிவரும் நிலையில், இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் கம்பேக் கொடுத்துள்ளனர். ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல்லில் ஆர்ச்சரின் பவுலிங் எடுபடவில்லை. அவர் முன்புபோல் வேகமாகவும் வீசுவதில்லை. இந்நிலையில், அவர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
IPL 2023: நீயா நானா போட்டியில் மும்பை - லக்னோ பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஹாரி ப்ரூக், ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஆலி போப், ஜோ ரூட், ஜாக் லீச், மேத்யூ பாட்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட்.