IPL 2023: உம்ரான் மாலிக்கை ஆடும் லெவனில் எடுக்காதது ஏன்..? பிரயன் லாரா விளக்கம்
ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவனில் எடுக்காதது ஏன் என்று பயிற்சியாளர் பிரயன் லாரா விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. 18 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன.
எஞ்சிய 3 இடங்களுக்கு 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அனைத்து அணிகளுக்குமே குறைந்தபட்ச வாய்ப்பிருப்பதால் அனைத்து அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேற கடுமையாக போராடிவருவதால் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது. ஒவ்வொரு போட்டியின் முடிவும் புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த சீசனில் புதிய கேப்டனான ஐடன் மார்க்ரமின் கேப்டன்சியில் கோப்பை கனவுடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை தழுவி தொடரை விட்டு வெளியேறிவிட்டது.
IPL 2023: நீயா நானா போட்டியில் மும்பை - லக்னோ பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
இந்த சீசன் முழுக்கவே தோல்விகளை சந்தித்துவந்த சன்ரைசர்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியிலும் 34 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் 7 வீரர்கள் பந்துவீசினர். ஆனால் அனைவருமே அடி வாங்கினர். புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் வீழ்த்தியதற்கு பலனே இல்லாமல் போனது.
இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்படும் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக்கை சன்ரைசர்ஸ் அணி ஆடும் லெவனில் புறக்கணித்தது பெரிய கேள்வியை எழுப்பியது. 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடிய உம்ரான் மாலிக், கடந்த சீசனில் அபாரமாக பந்துவீசி அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்திருந்தார். அதன்விளைவாக இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.
இந்த சீசனில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே ஆடி 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அவருக்கு அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் பிரயன் லாராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
IPL 2023: பையன் பட்டைய கிளப்புறான்.. சிஎஸ்கே பேட்ஸ்மேனுக்கு புகழாரம் சூட்டிய கேப்டன் தோனி
அதற்கு பதிலளித்த பிரயன் லாரா, நடப்பு ஃபார்மை பொறுத்துத்தான் வீரர்களுக்கு அணியில் ஆட வாய்ப்பளிக்கப்படும். இம்பேக்ட் பிளேயருடன் சேர்த்து மொத்தம் அணியின் சிறந்த 12 வீரர்களுக்குத்தான் அணியில் இடம். தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் தான் அணி தேர்வு அமையும் என்று உம்ரான் மாலிக் ஃபார்மில் இல்லாததால் தான் அவரை அணியில் எடுக்கவில்லை என்று லாரா தெரிவித்துள்ளார்.