3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. 3 டி20 போட்டிகள் சவுத்தாம்ப்டனிலும் 3 ஒருநாள் போட்டிகள் மான்செஸ்டரிலும் நடக்கவுள்ளன.

முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் ஆகியோரும், டாம் பாண்ட்டன், டேவிட் மாலன் ஆகிய பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களாக மொயின் அலி, சாம் கரன் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோரும் ஸ்பின்னராக அடில் ரஷீத்தும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் உட் ஆகியோர் என்ற காம்பினேஷனில் இங்கிலாந்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோ, டாம் பாண்ட்டன், டேவிட் மாலன், இயன் மோர்கன்(கேப்டன்), சாம் கரன், மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட்.

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல்,  மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்) மேத்யூ வேட் ஆகியோரும் ஸ்பின் ஆல்ரவுண்டர் அஷ்டன் அகர், ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா மற்றும் ஃபாஸ்ட் பவுலர்களாக பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மேத்யூ வேட், அஷ்டன் அகர், ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன்.