Akaay Meaning: விராட் கோலியின் மகனுக்கு இப்படியொரு பெயரா? இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு கடந்த 15 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2ஆவது குழந்தையை வரவேற்க இருப்பதாகவே செய்தி வெளியாகி வந்தது. இது குறித்து இந்த ஜோடி அதிகாரப்பூர்வகாவும் அறிவிக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு விராட் கோலியின் நண்பரும், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவியர்ஸ் தனது யூடியூப் சேனலில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2ஆவது குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்தார்.
இதையடுத்து, ஒரு சில நாட்களுக்கு பிறகு அது உண்மையில்லை என்று அதற்கு மறுப்பு செய்தியும் வெளியிட்டார். இந்த நிலையில் தான் நேற்று விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
ஆனால், கடந்த 15ஆம் தேதியே ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், நேற்று தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜோடிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 2021 அம் ஆண்டு வாமிகா பிறந்த நிலையில் தற்போது 2ஆவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர். அகாய் என்ற வார்த்தைக்கு துருக்கி மொழியில் ஜொலிக்கும் நிலவு என்று அர்த்தமாம். இதற்கு மற்றொரு அர்த்தமும் சொல்லப்படுகிறது. அதாவது, அகாய் என்பதற்கு வழிகாட்டி என்றும் கைகளைக் கொண்டு வழிநடத்துபவன் என்றும் அர்த்தமாகிறது.
இது ஆண் குழந்தைகளுக்கான பெயர் மட்டுமின்றி பெண் குழந்தைகளுக்கும் இந்த பெயர் வைக்கப்படுகிறது. தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடும்ப சூழல் காரணமாக விராட் கோலி இடம் பெற வில்லை. இதுவரையில் நடந்த 3 போட்டிகளில் இந்திய அணி 2-1 என்று முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் தான் விராட் கோலி குழந்தை பிறப்பிற்காகத்தான் அணியில் இடம் பெறாமல் இருந்து வந்துள்ளார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.