Asianet News TamilAsianet News Tamil

தென்னாப்பிரிக்காவை இந்தியா ஈசியா வீழ்த்தி டெஸ்ட் தொடரை ஜெயிச்சுரும்.! காரணங்களை லிஸ்ட் போட்ட தினேஷ் கார்த்திக்

தென்னாப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் எளிதாக வீழ்த்தி இந்திய அணி ஜெயித்துவிடும் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

Dinesh Karthik opines team india easily beat south africa in test series
Author
Chennai, First Published Dec 7, 2021, 9:11 PM IST

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 17ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்த தொடர் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் சற்று தாமதமாக டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30, செஞ்சூரியன்

2வது டெஸ்ட்: ஜனவரி 3-7, ஜோஹன்னஸ்பர்க்

3வது டெஸ்ட்: ஜனவரி 11-15, கேப்டவுன்

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இது மிகவும் முக்கியமான தொடர். அதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர், டெம்பா பவுமா, குயிண்டன் டி காக், ககிசோ ரபாடா, சாரெல் எர்வீ, பியூரன் ஹென்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, எய்டன் மார்க்ரம், வியான் மல்டர், அன்ரிக் நோர்க்யா, கீகன் பீட்டர்சன், ராசி வாண்டெர் டசன், கைல் வெரெய்ன், மார்கோ ஜான்சன், க்ளெண்டன் ஸ்டர்மான், பிரெனெலன் சுப்ராயென், சிசாண்டா மகளா, ரியான் ரிக்கெல்டான், டுவான் ஆலிவியர்.

இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கோலி தலைமையிலான இந்திய அணி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் என வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட அணியாக திகழ்கிறது. பவுலிங்கிலும் அஷ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி, சிராஜ் என சிறந்த பவுலர்களை கொண்ட அணியாக உள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி ஒருசில வீரர்களையே அதிகமாக சார்ந்துள்ளது. அதனால்தான் இந்திய அணி எளிதாக ஜெயித்துவிடும் என்று தினேஷ் கார்த்திக் நம்புகிறார்.

இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு. இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும். இந்திய அணியின் பவுலிங்,பேட்டிங் என இரண்டுமே சிறப்பாக உள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் மோசமாக உள்ளது. ரபாடா, நோர்க்யா மற்றும் சில பவுலர்களுடன் தென்னாப்பிரிக்க பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. ஆனால் பேட்டிங்கில் தென்னாப்பிரிக்க அணி ஒன்றிரண்டு வீரர்களையே அதிகமாக சார்ந்திருக்கிறது. எனவே இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எளிதாக வீழ்த்திவிடும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios