உலக கோப்பை தொடரில் தோற்று இந்திய அணி நாடு திரும்பிய நிலையில், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செல்கிறது இந்திய அணி. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. உலக கோப்பை தோல்வியை அடுத்து, மிடில் ஆர்டர் சிக்கல்களை கலைந்து வலுவான இந்திய அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

தோனியின் ஓய்வு குறித்த விவாதங்கள் வலுத்துவரும் நிலையில், தோனி அதுகுறித்து வாய்திறக்கவேயில்லை. அவர் இப்போதைக்கு ஓய்வு பெறும் ஐடியாவில் இல்லை என்பது தெரிகிறது. அதேநேரத்தில் தோனியை இனிமேல் 15 பேர் கொண்ட அணியில் எடுத்தாலும் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை என்பதை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெளிவாக தெரிவித்துவிட்டார். 

சூழல் இப்படியாக இருக்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடர் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி கண்டிப்பாக இருக்கமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி, இந்திய துணை ராணுவப்படையின் அணிவகுப்பில் கலந்துகொள்ள இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து அவராகவே விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.