Asianet News TamilAsianet News Tamil

தோனிக்கு ஆப்பு.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அடுத்ததாக இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடவுள்ளது. தென்னாப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவிற்கு வந்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

dhoni will not have place in team india for 20 series against south africa says report
Author
India, First Published Aug 29, 2019, 1:16 PM IST

உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலக கோப்பைக்கு பின்னும் அவர் மௌனம் காத்ததால், அவரது ஓய்வு குறித்த விவாதம் வலுத்தது. தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என்றாலும், அவருக்கு அணியில் இடமில்லை என்பதை தேர்வுக்குழு வெளிப்படையாகவே தெரிவித்தது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி இடம்பெறுவாரா இல்லையா என்பது ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருந்த நிலையில், ”நீங்க சேர்த்துகிட்டாலும் நான் வரலப்பா” என்கிற ரீதியில், ராணுவ பயிற்சிக்காக போகப்போவதாக கூறி, அணி அறிவிக்கும் முன்னரே தன்னை விடுவித்துக்கொண்டார் தோனி. 

dhoni will not have place in team india for 20 series against south africa says report

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்க, தோனியோ எல்லைப்பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். பாராசூட் ரெஜிமெண்ட், ரோந்து என தோனி ராணுவ பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிவிட்டார். 

அடுத்ததாக இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடவுள்ளது. தென்னாப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவிற்கு வந்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணியில் தோனிக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. 

dhoni will not have place in team india for 20 series against south africa says report

2020 அக்டோபரில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது இந்திய அணி நிர்வாகம். ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் என்று உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் அவரது ஆட்டத்தை பொருட்படுத்தாமல் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும். 

dhoni will not have place in team india for 20 series against south africa says report

ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக இளம் விக்கெட் கீப்பர்களான இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. அதனால் தோனிக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என்றாலும், அவருக்கு அணியில் இடம் கிடைக்காது என்பது உறுதி. அந்தவகையில், தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. ஆனால் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட் தான் இருப்பார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios