Asianet News TamilAsianet News Tamil

திறமையுடனும் திமிருடனும் கெத்தா வலம்வந்த அணியை சைக்கலாஜிக்கலா அட்டாக் பண்ண தல.. முரட்டு சம்பவத்தின் சுவாரஸ்ய ஃப்ளாஷ்பேக்

எந்த அணியுடன் மோதினாலும் வெற்றி, எல்லா தொடரிலும் வெற்றி, தரவரிசையில் முதலிடம் என அந்த காலக்கட்டத்தில் எதிரணிகளின் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது ஆஸ்திரேலிய அணி. பாண்டிங் தலைமையிலான அந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கிய அணி அது. தோல்வியே கூடாது; என்ன செய்தாவது, எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதே அந்த அணியின் ஒற்றை இலக்கு.
 
dhoni psychological attack to ricky ponting lead australian team in 2008
Author
Melbourne VIC, First Published Sep 13, 2019, 3:27 PM IST

ரிக்கி பாண்டிங் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு, 2008ல் அப்போதைய இந்திய அணியின் இளம் கேப்டன் தோனி பாடம் புகட்டிய சம்பவத்தை விரிவாக பார்ப்போம். 

தோனியின் ஓய்வு குறித்த விவாதங்கள் நடந்துவரும் நிலையில், நேற்றைய தினம் விராட் கோலி பதிவிட்ட ஒரு புகைப்படத்தால், தோனி ஓய்வறிவிக்கப்போகிறார் என்ற தகவல் வைரலாக பரவியது. ஆனால் தோனியின் ஓய்வு குறித்த எந்த அப்டேட்டும் இல்லை என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார். தோனியின் மனைவியும் அந்த தகவலை மறுத்தார். 

தோனி அவரது கிரிக்கெட் கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் நிலையில், பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த காலத்தில் அந்த அணிக்கு தோனி கொடுத்த சைக்கலாஜிகல் ட்ரீட்மெண்ட்டை பார்ப்போம்.

dhoni psychological attack to ricky ponting lead australian team in 2008

பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2002லிருந்து சுமார் 7 முதல் 8 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக கிரிக்கெட் உலகில் திகழ்ந்தது. பாண்டிங் தலைமையில் 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு உலக கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி வென்றது. 

எந்த அணியுடன் மோதினாலும் வெற்றி, எல்லா தொடரிலும் வெற்றி, தரவரிசையில் முதலிடம் என அந்த காலக்கட்டத்தில் எதிரணிகளின் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது ஆஸ்திரேலிய அணி. பாண்டிங் தலைமையிலான அந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கிய அணி அது. தோல்வியே கூடாது; என்ன செய்தாவது, எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதே அந்த அணியின் ஒற்றை இலக்கு.

dhoni psychological attack to ricky ponting lead australian team in 2008

எந்த அணியாலும் தங்களை வீழ்த்த முடியாது என்ற ஆணவத்துடனும், அதற்கான திறமையுடனும் வலம்வந்த ஆஸ்திரேலிய அணிக்கு அப்போதைய இந்திய அணியின் இளம் கேப்டனான தோனி, ஆஸ்திரேலியா வீழ்த்த முடியாத அணி அல்ல என்பதை அந்த அணிக்கு சவுக்கடி கொடுத்து உணர்த்தியதோடு, சைக்கலாஜிகலாக அட்டாக்கும் செய்தார். 

2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் பேங்க் தொடரின் மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி இலக்கை விரட்டியபோது, வெற்றிக்கு இன்னும் 10 ரன்களே தேவை என்ற நிலையில், களத்தில் தோனியும் ரோஹித்தும் இருந்தனர். அப்போது கையுறை கேட்பது போன்று ஓய்வறைக்கு ஒரு செய்தி அனுப்பினார். நாம் வெற்றி பெற்றதும் அதை பெரியளவில் கொண்டாட வேண்டாம் என்று ஓய்வறைக்கு செய்தி அனுப்பினார். எதிர்முனையில் ஆடிய ரோஹித்திடமும் அதை தெரிவித்துவிட்டார். 

dhoni psychological attack to ricky ponting lead australian team in 2008

வெற்றி பெற்றதும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை கொண்டாடவில்லை. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது என்பது பெரிய விஷயம் அல்ல என்பதையும் இந்த வெற்றி அதிர்ஷ்டத்திலோ எதிர்பாராத விதமாகவோ கிடைத்த வெற்றி அல்ல என்பதையும் அந்த அணிக்கு உணர்த்தினார். ஜாம்பவனாக இருக்கும் நம்மை வீழ்த்திவிட்டு,  அந்த வெற்றியை இந்த இந்திய அணி கொண்டாடவில்லையே என்று ஆஸ்திரேலிய அணி நினைக்கும் வண்ணம் அந்த செயலை செய்தார் தோனி. 
 
Follow Us:
Download App:
  • android
  • ios