உலகக் கோப்பைத் கிரிக்ட் தொடரில் தோனி சரியாக விளையாடவில்லை என எழுந்த குற்றச்சாட்டை அடுத்து  அவர்  தோனியின் ஓய்வு  அறிவிக்கப் போகிறார் என பேச்சுக்கள் எழுந்தன.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி பங்கேற்கமாட்டார் என்ற கூறப்பட்டு வருகிறது. 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருப்பினும் 11 பேர் அணியில் தோனி இடம்பெறமாட்டார். அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விளையாடுவார். இளம் வீரர் ரிஷப் பந்துக்கு தேவையான ஆலோசனைகளை அவர் வழங்குவார் என கூறப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் இன்று வெளியாகவுள்ள நிலையில் தோனி பங்கேற்கமாட்டார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

தற்போது துணை  ராணுவப் படையில் அடுத்த 2 மாதங்கள் பணியாற்ற உள்ளதால் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணியில் பங்கேற்க முடியாது என தோனி பிசிசிஐக்கு கடிதம் எழுதி உள்ளார். 

இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் உள்ள தோனி நேரம் கிடைக்கும்போது ராணுவ வீரர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.