உலக கோப்பை தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்த தவான், அந்த போட்டியில் காயமடைந்ததால் தொடரிலிருந்து விலகினார். அதன்பிறகு தவானுக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக களமிறங்கினார். 

உலக கோப்பை தொடரிலிருந்து விலகிய தவான், ஒன்றரை மாதமாக ஓய்வில் இருந்துவந்தார். தவான் காயத்திலிருந்து மீண்டுவிட்டாரா, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ஆடுவாரா என்ற சந்தேகங்கள் இருந்துவந்தன. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தவான் குறித்த அப்டேட் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தான் பயிற்சி செய்யும் வீடியோவை தவான் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் முழு உடற்தகுதியை பெற்றுவிட்டதை பறைசாற்றும் விதமாக அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். 

எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தவான் ஆடுவார் என்று தெரிகிறது. இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தவான் பெயர் இடம்பெறுகிறதா என்பதை பார்ப்போம்.