பஞ்சாப் கிங்ஸூக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கான டெல்லி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மிட்செல் மார்ஷ் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், சர்ஃபராஸ் கான், ஷர்துல் தாகூர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் கடந்த போட்டியில் ஆடாத கேப்டன் மயன்க் அகர்வால் இந்த போட்டியில் ஆடுவதால் பிரப்சிம்ரான் சிங் நீக்கப்பட்டுள்ளார். மேலும் ஒடீன் ஸ்மித்துக்கு பதிலாக நேதன் எல்லிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ரபாடா, நேதன் எல்லிஸ், ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.
