Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி! பெரிய தலைக்கு இடம் இல்லை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

delhi capitals probable playing eleven for the match against sunrisers hyderabad in ipl 2021
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 21, 2021, 10:08 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம்  ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாளை துபாயில் நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.

டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த சீசனின் முதல் பாதியில் 8 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்றது. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ, ஆடிய 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி கேபிடள்ஸ் அணி முதல் பாதி சீசனில் அருமையாக ஆடி வெற்றிகளை குவித்த நிலையில், அதே தன்னம்பிக்கையுடன் 2வது பாகத்திலும் களமிறங்குகிறது டெல்லி அணி.  2வது பாகத்தின் முதல் போட்டியில் நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது டெல்லி அணி.

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் டெல்லி அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். காயத்தால் முதல் பாதி சீசனில் ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர் 2வது பாதியில் ஆடுகிறார். 4 வெளிநாட்டு வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, ஷிம்ரான் ஹெட்மயர் ஆகிய நால்வரும் களமிறங்குவார்கள்.

உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைந்துவிட்டதால் ஸ்மித்தை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, ஆவேஷ் கான்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios