IPL 2023: கடைசி இடத்தில் குஜராத் டைட்டன்ஸ், நம்பர் இடத்தில் டெல்லி கேபிடல்ஸ்: எதுல தெரியுமா?
ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் தோற்ற அணியாக டெல்லி கேபிடல்ஸ் (121) அணி முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகளுடன் மட்டுமே களம் கண்ட ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது 10 அணிகளாக அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறை சாம்பியன் வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெக்கான் சார்ஜஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் வென்றுள்ளன.
IPL 2023: U19 WC வின்னிங் கேப்டன் - இப்போ ஐபிஎல் SRH-ன் 9ஆவது கேப்டனாக ஐடன் மார்க்ரம் புதிய அவதாரம்!
கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு சீசனில் 10 அணிகள் இடம் பெற்றன. இதையடுத்து 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் 9 அணிகள் பங்கேற்றன. நடப்பு ஆண்டில் இதுவரையில் 10 போட்டிகள் நடந்துள்ளன். இதில், நடந்த 2 போட்டிகளிலும் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தோல்வியை தழுவியுள்ளது. இதுவரையில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை தோல்வி அடைந்த அணியாக டெல்லி கேபிடல்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த சீசனில் நடந்த குவாலிபையர் மற்றும் இறுதிப் போட்டிகள் உள்பட 16 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 12 போட்டுகளில் வெற்றி கண்டுள்ளது. அதே போன்று இந்த ஆண்டு விளையாடிய 2 போட்டிகளிலும் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் 2 போட்டிகளிலும் தோற்று அதிக போட்டிகளில் (121) தோல்வி அடைந்த அணியாக முதலிடம் பிடித்துள்ளது. இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் அணி 117 போட்டிகளில் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்துள்ளது.
IPL 2023: கோதாவுல இறங்கி ரோகித் சர்மாவுக்கு பயிற்சி கொடுக்கும் சச்சின்; நாளைக்கு சம்பவம் கன்ஃபார்ம்!
ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 115 போட்டிகளில் தோல்வி அடைந்து 3ஆவது இடம் பிடித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 110 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 101 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 95 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 88 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 79 போட்டிகளிலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி 4 போட்டிகளில் மட்டும் தோல்வி அடைந்து கடைசி இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.