- Home
- Sports
- Sports Cricket
- IPL 2023: U19 WC வின்னிங் கேப்டன் - இப்போ ஐபிஎல் SRH-ன் 9ஆவது கேப்டனாக ஐடன் மார்க்ரம் புதிய அவதாரம்!
IPL 2023: U19 WC வின்னிங் கேப்டன் - இப்போ ஐபிஎல் SRH-ன் 9ஆவது கேப்டனாக ஐடன் மார்க்ரம் புதிய அவதாரம்!
தென் ஆப்பிரிக்கா டி20 அணிகளின் கேப்டன், அண்டர் 19 உலக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன், எஸ்ஏ20 வின்னிங் கேப்டனாக அவதாரம் எடுத்த ஐடன் மார்க்ரம் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 9ஆவது கேப்டனாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

ஐடன் மார்க்ரம் - சன்ரைசர்ஸ் ஹதராபாத்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடர் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் உனக்கு நான் சலைத்தவர் அல்ல என்று கூறும் அளவிற்கு ஓவ்வொரு அணியும் கடுமையாக விளையாடி வருகிறது.
ஐடன் மார்க்ரம் - சன்ரைசர்ஸ் ஹதராபாத்
அதுமட்டுமா, வீரர்களின் திறமைகளும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், இந்த ஐபிஎல் தொடரில் சர்வதேச போட்டி காரணமாக கடந்த 2ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐடன் மார்க்ரம் கலந்து கொள்ளவில்லை. அந்தப் போட்டியில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது.
ஐடன் மார்க்ரம் - சன்ரைசர்ஸ் ஹதராபாத்
ஹைதராபாத்தின் ஹோம் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமெ எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த அணி மட்டுமின்றி ஹோம் மைதானத்தில் நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தோல்வி அடைந்துள்ளன.
சன்ரைசர்ஸ் ஹதராபாத் கேப்டன்
இந்தப் போட்டியைத் தொடர்ந்து லக்னோ அணியின் ஹோம் மைதானமான அடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஐடன் மார்க்ரம் - சன்ரைசர்ஸ் ஹதராபாத்
இந்தப் போட்டியின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் 9ஆவது கேப்டனாக தன்னை நிலைநாட்டிக் கொண்டார். ஐடன் மார்க்ரம், அண்டர்19 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டனாக இடம் பெற்று வெற்றி பெறச் செய்தார்.
ஐடன் மார்க்ரம் - சன்ரைசர்ஸ் ஹதராபாத்
இதே போன்று எஸ்ஏ20 அணியை கேப்டனாக வெற்றி பெறச் செய்துள்ளார். அதுமட்டுமின்றி தென் ஆப்பிரிக்கா அணியின் டி20 போட்டிக்கு கேப்டனாகவும் இருக்கிறார்.
ஐடன் மார்க்ரம் - சன்ரைசர்ஸ் ஹதராபாத்
இந்த நிலையில், இன்று நடக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
ஐடன் மார்க்ரம் - சன்ரைசர்ஸ் ஹதராபாத்
இதற்கு முன்னதாக, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், குமார் சங்கக்காரா, கேமரூன் ஒயிட், ஷிகர் தவான், டேரன் சமி, புவனேஷ்வர் குமார், மணீஷ் பாண்டே ஆகியோர் கேப்டனாக இருந்துள்ளனர்.