Asianet News TamilAsianet News Tamil

#SLvsIND இலங்கை தொடருக்கான இந்திய அணியின் கேப்டன்.. அவருதான் சரியான தேர்வாக இருப்பார்..! தீபக் சாஹர் அதிரடி

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் கேப்டன்சி குறித்து தீபக் சாஹர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

deepak chahar opines shikhar dhawan will be the right choice to lead team india in sri lanka series
Author
Chennai, First Published May 21, 2021, 8:12 PM IST

இந்திய அணி ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடுகிறது. அதன்பின்னர் ஆகஸ்ட் - செப்டம்பரில் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

இதற்கிடையே ஜூலை மாதம் இலங்கையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி ஆடவுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சீனியர் வீரர்கள் ஆடமாட்டார்கள். 

வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான ஷிகர் தவான், சாஹல் ஆகியோரும் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே என அடுத்தகட்ட இந்திய வீரர்களுடன் இலங்கைக்கு சென்று ஆடுகிறது இந்திய அணி. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஆகியோர் ஆடாததால், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் யார் என்பதே கேள்வியாக உள்ளது.

deepak chahar opines shikhar dhawan will be the right choice to lead team india in sri lanka series

ஷ்ரேயாஸ் ஐயர் அந்த தொடரில் ஆடுவது சந்தேகமாகவுள்ளது. எனவே சீனியர் வீரர் என்ற முறையில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேவேளையில், ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் கேப்டனுக்கான தேர்வில் உள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தீபக் சாஹர், ஷிகர் தவான் கேப்டனுக்கான சரியான தேர்வாக இருப்பார். நீண்டகாலமாக இந்திய அணிக்கு ஆடிவரும் அனுபவ வீரர். என்னை பொறுத்தமட்டில் ஒரு சீனியர் வீரர் தான் கேப்டனாக இருக்கவேண்டும். அப்போதுதான், வீரர்கள் ஒரு சீனியர் என்ற முறையில் மரியாதையும் கொடுப்பார்கள். கேப்டனுக்கு கீழ்படிந்தும் நடப்பார்கள். ஒரு கேப்டனை வீரர்கள் அனைவரும் மதிக்க வேண்டும். அந்தவகையில், ஷிகர் தவான் தான் கேப்டனுக்கான சரியான தேர்வு என்று தீபக் சாஹர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios