Asianet News TamilAsianet News Tamil

தனி ஒருவனாக தென்னாப்பிரிக்காவை தூக்கி நிறுத்தும் எல்கர்.. அபார சதமடித்து அசத்தல்.. மண்டை காயும் இந்திய பவுலர்கள்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருமுனையில் விக்கெட்டுகளை இழந்துகொண்டிருக்க, மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிவரும் டீன் எல்கர் சதமடித்து அசத்தினார். 
 

dean elgar scores century against india in first test
Author
Vizag, First Published Oct 4, 2019, 1:42 PM IST

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே அபாரமாக ஆடினர். ரோஹித் சர்மா 176 ரன்களையும் இரட்டை சதமடித்த மயன்க் அகர்வால் 215 ரன்களையும் குவித்தனர். இவர்கள் இருவரின் அபாரமான பேட்டிங்கால் 502 ரன்களை குவித்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

நேற்றைய ஆட்டத்தில் 20 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவரை சமாளித்து ஆடிமுடிக்க முடியாமல் 3 விக்கெட்டுகளை இழந்தது. மார்க்ரம், டி ப்ருய்ன் மற்றும் டேன் பீட் ஆகிய மூவரும் நேற்று ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் எல்கருடன் பவுமா ஜோடி சேர்ந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பவுமாவை இஷாந்த் சர்மா வீழ்த்திவிட்டார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் டீன் எல்கர் நங்கூரமிட்டு நிலைத்து ஆடினார். அவருக்கு யாருமே ஒத்துழைப்பு கொடுக்காமல் அவுட்டாகிவந்த நிலையில், பவுமாவின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த கேப்டன் டுப்ளெசிஸ், எல்கருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். 

dean elgar scores century against india in first test

எல்கரை தொடர்ந்து அரைசதம் அடித்த டுப்ளெசிஸ், அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் எல்கர் தொடர்ந்து சிறப்பாக ஆடி சதமடித்தார். எல்கருடன் ஜோடி சேர்ந்த டி காக் அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்துவருகிறார். டி காக் அரைசதத்தை நெருங்கிவிட்டார். முதல் 4 விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்திவிட்ட இந்திய அணிக்கு, அதன்பின்னர் விக்கெட்டுகள் எளிதாக கிடைக்கவில்லை. 

குறிப்பாக எல்கர் நங்கூரமிட்டு ரொம்ப தெளிவாகவும் சிறப்பாகவும் ஆடிவருகிறார். 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்களுக்கு மேல் அடித்து தென்னாப்பிரிக்க அணி ஆடிவருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios