Asianet News TamilAsianet News Tamil

இங்கிலாந்தே பெருமைப்படும் சாதனையை படைத்த டேவிட் மலான்..! சர்வதேச கிரிக்கெட்டில் பட்லருக்கு அடுத்த 2வது வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மட்டிலும் சதமடித்த 2வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் டேவிட் மலான்.
 

dawid malan is the second england cricketer to score century in all three formats in international cricket after jos buttler
Author
Netherlands, First Published Jun 17, 2022, 6:04 PM IST

இங்கிலாந்து - நெதர்லாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட்(122), டேவிட் மலான் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய மூவருமே சதமடித்தனர். ஃபிலிப் சால்ட் 122 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சதமடித்த மலானும் பட்லரும் தொடர்ந்து ஆடிவருகின்றனர். 

இந்த போட்டியில் அடித்த சதம் தான், ஒருநாள் கிரிக்கெட்டில் டேவிட் மலானின் முதல் சதம். சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் சதமடித்துள்ள டேவிட் மலான், இன்று ஒருநாள் போட்டியிலும் சதமடித்தார்.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மட்டிலும்(டெஸ்ட், டி20, ஒருநாள்) சதமடித்த 2வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் டேவிட் மலான்.  சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மட்டிலும் சதமடித்த முதல் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர்.

பட்லரை தொடர்ந்து டேவிட் மலானும் 3 விதமான ஃபார்மட்டிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளார். 2019ல் நேப்பியரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் டேவிட் மலான் (103) சதமடித்திருந்தார். டெஸ்ட்டிலும் சதமடித்திருந்த மலான்,இன்று ஒருநாள் போட்டியிலும் சதமடித்து அசத்தினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios