ஐசிசி டி20 பேட்ஸ்மேன் ரேங்கிங்கில் வரலாற்று சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன்.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து அணி வென்றது.
இந்த தொடரில் இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் மாலன், 2வது மற்றும் 3வது டி20 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்ற மாலன், தொடர் நாயகன் விருதையும் வென்றார். 2வது போட்டியில் அரைசதம் அடித்த மாலன், நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் 99 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இந்த தொடரில் அபாரமாக ஆடிய மாலன், ஐசிசி டி20 ரேங்கிங்கில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ஏற்கனவேவும் டி20 ரேங்கிங்கில் முதலிடத்தில் இருந்த மாலன், இந்த தொடரில் சிறப்பாக ஆடியதன் விளைவாக, இதுவரை டி20 பேட்ஸ்மேன் ரேங்கிங்கில் யாருமே பெற்றிராத அளவிற்கு அதிகபட்சமாக 915 புள்ளிகளை பெற்றுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 2, 2020, 6:24 PM IST