விராட் கோலி கொடுத்த ஜெர்சியால் வார்னரின் நடு மகள் செம மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். 

ஆஸி.,க்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை வென்றது; ஒருநாள் தொடரை இழந்தது. 2வது முறையாக ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விராட் கோலி, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, ஜடேஜா, அஷ்வின், கேஎல் ராகுல் என முக்கியமான வீரர்கள் ஒவ்வொருவராக தொடரை விட்டு தொடர்ந்து வெளியேறியபோதிலும், இருக்கிற வீரர்களை வைத்து ரஹானே தலைமையில் இந்திய அணி ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இந்தியாவின் பெரும் சாதனையாகவும், ஆஸி.,யின் படுதோல்வியாகவும் பார்க்கப்படுகிறது.

ஆஸி., அணி தோல்வியடைந்திருந்தாலும், வார்னரும் அவரது குடும்பமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்; அதற்கு காரணம் விராட் கோலி. வார்னரின் நடு மகள் விராட் கோலியின் மிகத்தீவிர ரசிகை. இதை வார்னரின் மனைவியே ஒருமுறை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தான் அணிந்து ஆடிய ஜெர்சியை விராட் கோலி, வார்னரின் நடு மகள் இண்டிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

அதனால், செம மகிழ்ச்சியடைந்த வார்னரின் மகள் அந்த ஜெர்சியை அணிந்து மகிழ்ந்தார். மகளின் மகிழ்ச்சியால் தானும் மகிழ்ச்சியடைந்த வார்னர், அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ஆஸி., டெஸ்ட் தொடரை இழந்திருந்தாலும், இங்கு ஒருவர் மட்டும் செம மகிழ்ச்சியாக உள்ளார். உங்களது ஜெர்சியை வழங்கியதற்கு நன்றி கோலி என்று வார்னர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

View post on Instagram