108 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்த வார்னரை அவரது மகள்கள் வாசலுக்கு ஓடிவந்து கட்டியணைத்து அன்பை பொழிந்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடிய வார்னர், அதன்பின்னர் அப்படியே ஐபிஎல்லில் ஆடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். ஐபிஎல்லில் ஆடிவிட்டு, அங்கிருந்து ஆஸ்திரேலியா திரும்பிய வார்னர், ஆஸ்திரேலியாவில் குவாரண்டினில் இருந்தார்.

மொத்தமாக வீட்டிலிருந்து கிளம்பி 108 நாட்கள் கழித்து மீண்டும் வீட்டிற்கு திரும்பிய வார்னரை கண்டவுடன், வாசலுக்கு ஓடிவந்து அவரது செல்ல மகள்கள் கட்டியணைத்து அன்பை பொழிந்து வரவேற்றனர்.

வார்னருக்கு இவி மே(6), இண்டி ரே(4), இஸ்லா ரோஸ்(2) ஆகிய 3 மகள்கள் உள்ள நிலையில், முதலிரண்டு மகள்களும் வாசலுக்கு ஓடிவந்து வார்னரை கட்டிப்பிடித்தனர். கடைக்குட்டியை வீட்டிற்குள் சென்று பாசத்தை பொழிந்தார் வார்னர். அந்த வீடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா டுவிட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், வார்னரும் தனது குடும்ப புகைப்படைத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.