கொரோனா உலகம் முழுதும் தீவிரமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்களுக்கு உலகம் முழுதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் முக்கியமாக செய்ய வேண்டியது, தங்களை தனிமைப்படுத்தி கொள்வதுதான். 

எனவே உலக மக்கள் அனைவரும் முடிந்தவரை தங்களை தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில், அவரை தனிமைப்படுத்துவதாக இருந்தால் யாருடன் தனிமைப்படுத்த வேண்டும் என்று விரும்புவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

Also Read - எவ்வளவு பெரிய கிரேட் பிளேயரை இவ்வளவு அசால்ட்டா அசிங்கப்படுத்தீட்டிங்க.. பிசிசிஐ அதிகாரியை விளாசிய கவாஸ்கர்

அதற்கு பதிலளித்த டேல் ஸ்டெய்ன், குயிண்டன் டி காக்குடன் என்னை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஏனெனில் அவர் எப்போதுமே மீன்பிடி வீடியோக்கள் அல்லது சமையல் வீடியோக்களையே பார்த்துக்கொண்டிருப்பார். அவர் நல்ல சமையல்காரர். எனக்கு சமையல் செய்யவே பிடிக்காது. எனவே குயிண்டன் டி காக்குடன் தனிமைப்படுத்தினால், நல்ல உணவு கிடைக்கும். அதனால் குயிண்டன் டி காக்குடன் இருக்கவே விரும்புவேன் என்று ஸ்டெய்ன் தெரிவித்தார்.