பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 15வது சீசனில் மும்பை வான்கடேவில் நடக்கும் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது சிஎஸ்கே.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், ட்வைன் ப்ரிட்டோரியஸ், ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்ஷனா, முகேஷ் சௌத்ரி.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் அணி நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்த தமிழகத்தை சேர்ந்த அதிரடி ஃபினிஷரான ஷாருக்கான் தொடர்ந்து சொதப்பிவந்ததால், அவர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் நேதன் எல்லிஸ் மற்றும் வைபவ் அரோரா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். ஷாருக்கான், எல்லிஸ், அரோரா ஆகிய மூவரும் நீக்கப்பட்டு பானுகா ராஜபக்சா, சந்தீப் ஷர்மா, ரிஷி தவான் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் ஷர்மா, அர்ஷ்தீப் சிங்.
