IPL 2023: ருதுராஜ் அபார அரைசதம்.. கான்வே நல்ல பேட்டிங்..! GT-க்கு சவாலான இலக்கை நிர்ணயித்த சிஎஸ்கே
ஐபிஎல் 16வது சீசனின் முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 172 ரன்களை குவித்து 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை குஜராத்துக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ, மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன. நாளை சென்னையில் நடக்கும் எலிமினேட்டரில் லக்னோ - மும்பை அணிகள் மோதுகின்றன.
இன்று சென்னையில் நடந்துவரும் முதல் தகுதிப்போட்டியில் குஜராத் - சிஎஸ்கே அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும். எனவே இரு அணிகளுமே ஃபைனலுக்கு முன்னேறும் முனைப்பில் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தசுன் ஷனாகா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், தர்ஷன் நால்கண்டே, மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்களை சேர்த்து கொடுத்தனர். கான்வே 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
IPL 2023: ரிக்கி பாண்டிங்கின் அடத்தால் அழிந்த டெல்லி கேபிடள்ஸ்..! செம காட்டு காட்டிய கவாஸ்கர்
ரஹானே மற்றும் ராயுடு ஆகிய இருவருமே தலா 17 ரன்கள் அடித்தனர். ஜடேஜா 16 பந்தில் 22 ரன்கள் அடித்து முடித்து கொடுக்க, 20 ஓவரில் 172 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 173 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது.