ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பயிற்சியை தொடங்கிவருகின்றனர். 

இந்நிலையில், சிஎஸ்கே அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகளும் சோகங்களும் நிகழ்ந்துவருகின்றன. சிஎஸ்கே அணியின் ஒரு மிதவேகப்பந்து வீச்சாளர், அணி நிர்வாகத்தின் உயரதிகாரி, அணியின் உதவியாளர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியானது. 

கொரோனா உறுதியான பவுலர் தீபக் சாஹர் என்று தகவல் வெளிவந்தது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலராக கடந்த 2 ஆண்டுகளாக இருந்துவரும் தீபக் சாஹருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர் மட்டுமல்லாது மற்றொரு சிஎஸ்கே வீரருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அந்த வீரரின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. தீபக் சாஹர், மற்றொரு வீரர் மற்றும் சிஎஸ்கே அணியை சேர்ந்த மற்ற சிலர் என மொத்தம் 10 பேருக்கு மேல் கொரோனா உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் சிஎஸ்கே அணி பயிற்சியை தொடங்குவது தாமதமாகியுள்ளது. 

இதற்கிடையே, சிஎஸ்கே அணியின் முக்கியமான தூணான சுரேஷ் ரெய்னா, தனது சொந்த காரணங்களுக்காக ஐபிஎல்லில்லிருந்து முழுவதுமாக விலகி இந்தியாவிற்கு திரும்பிவிட்டார். சிஎஸ்கே அணியை அடுத்தடுத்த அதிர்ச்சிகளும் சோகங்களும் தாக்கிவருகின்றன.