Asianet News TamilAsianet News Tamil

இலவச டிக்கெட் – அரசு செலவல்ல – போக்குவரத்து கழகத்துடன் சிஎஸ்கே ஒப்பந்தம் – முழு தொகையை செலுத்திய சிஎஸ்கே!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்ப்பில் இலவச பேருந்து ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், அதற்குரிய முழு தொகையை சிஎஸ்கே அரசு போக்குவரத்து கழகத்திற்கு முன்கூட்டியே வழங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

CSK management, which has an agreement with the state transport corporation, has paid the travel expenses to the transport department for Free Bus Ticket for IPL Matches rsk
Author
First Published Mar 23, 2024, 1:28 PM IST

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்தப் போட்டியை பார்ப்பதற்கு சென்னையின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் குவித்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட் கடும் டிமாண்டாக உள்ளது. 2 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் 5ஆயிரம் முதல் 10ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

எனினும் தோனி மற்றும் கோலியை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதே நேரத்தில் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில், கிரிக்கெட் போட்டியை நேரடியாக பார்க்க வருபவர்கள் சென்னை பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால், உண்மையில், சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் ஏற்பாடு செய்தது அரசு செலவில் அல்ல. அதற்குரிய முழு கட்டணத்தையும் சிஎஸ்கே நிர்வாகம் போக்குவரத்து கழகத்திற்கு முன் கூட்டியே செலுத்திவிட்டனர்.

இதன் காரணமாகத்தேன் அரசு போக்குவரத்து கழகத்தில் ரசிகர்கள் இலவச பேருந்து டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கூட கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் கூட சிஎஸ்கே நிர்வாகம் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து ஐபிஎல் டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ ரயில் சேவையை அறிவித்திருந்தது.

அதே போன்று தான் இந்த முறையும், சிஎஸ்கே நிர்வாகம், அரசு போக்குவரத்து கழகத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு இலவச போக்குவரத்து சேவை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், IPL போட்டியை காணவரும் பார்வையாளர்கள் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணச்சீட்டு பெறாமல் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும்  IPL போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, Chennai super kings cricket limited மாநகரப் போக்குவரத்து கழகத்தில் முன்னதாக பணம் செலுத்தி போட்டியை காண வருபவர்களின் வசதிக்காக online/ pre printed டிக்கெட் வைத்திருந்தால் போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பு பிற இடங்களில் இருந்து சிதம்பரம் விளையாட்டு மைதானத்திற்கும் போட்டி முடிந்த பின்பு மூன்று மணி நேரத்திற்குள் மைதானத்தில் இருந்து பிற இடங்களுக்கும் பயணச்சீட்டு பெறாமல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் பயணி டிக்கெட் வைத்துள்ளாரா என உறுதி செய்த பின்னர் நடத்துநர் அவர்களை பயணிக்க அனுமதிக்க வேண்டும். Online / pre printed டிக்கெட்டில் போட்டி நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் நாளில் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பயண சீட்டு பரிசோதகர்களுக்கும் அறிவுறுத்த வேண்டுமென போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அடுத்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios