இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது.

கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது. ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவில் ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன்னிலிருந்து 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது. ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகமாகவுள்ள நிலையில், சிஎஸ்கே அணி சார்பில் 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.

கொரோனாவை எதிர்கொள்ள கிரிக்கெட் வீரர்களும், ஐபிஎல் அணிகளும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவரும் நிலையில், சிஎஸ்கே அணி நிதியுதவியாக செய்யாமல், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது.