சுற்றிலும் தண்ணீர், நடுவுல டென்னிஸ் கோர்ட் – தோனிக்கு போட்டியாக டென்னிஸ் விளையாடிய ரிஷப் பண்ட் – வைரல் வீடியோ!
துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இருவரும் டென்னிஸ் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று துபாயில் நடந்தது. இதில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் கலந்து கொண்டு வீரர்களை ஏலம் கேட்டார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிக தொகைக்கு குமார் குஷாக்ரா ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
டிராவிஸ் ஹெட்டிற்கு வாழ்த்து சொல்ல முயன்ற வார்னரை, இன்ஸ்டாவில் பிளாக் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஜார்க்கண்ட் விக்கெட் கீப்பரான குமார் குஷாக்ராவை கடுமையான போட்டிகளுக்கு நடுவில் டெல்லி கேபிடல்ஸ் ரூ.7.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. 19 வயதான அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தியோதர் டிராபியில் 5 இன்னிங்ஸ்களில் 109.13 ஸ்ட்ரைக் ரேட்டில் 227 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 6ஆவது இடம் பிடித்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து ரூ.7.20 கோடிக்கு டெல்லி அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஜே ரிச்சர்ட்சன் ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஹாரி ஃப்ரூக் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் சுமித் குமார் ரூ.1 கோடிக்கும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் ரூ.75 லட்சத்திற்கும், தென் ஆப்பிரிக்கா வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.50 லட்சத்திற்கும், இந்திய வீரர் ரிக்கி புய் ரூ.20 லட்சத்திற்கும், ஸ்வஸ்திக் சிகாரா ரூ.20 லட்சத்திற்கும், இந்திய வீரர் ராசிக் தர் ரூ.20 லட்சத்திற்கும் வாங்கப்பட்டார்.
இந்த நிலையில் தான் இந்த ஏலம் முடிந்த பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன், பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இருவரும் டென்னிஸ் விளையாடியுள்ளனர். சுற்றிலும் தண்ணீர், நடுவில் டென்னிஸ் கோர்ட்டில் தோனிக்கு போட்டியாக பண்ட் டென்னிஸ் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
MS Dhoni and Rishabh Pant playing Tennis in Dubai. 🔥pic.twitter.com/1RRqqsrT5S
— Johns. (@CricCrazyJohns) December 20, 2023