IPL 2023: முக்கியமான போட்டியில் நீயா நானா என மோதும் பரம எதிரிகள்.! மும்பை - சென்னை அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. 12 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் உள்ள நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 6 அணிகளும் தலா 5 வெற்றிகளை பெற்றுள்ளன.
இவற்றில் லக்னோ, சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும், மும்பை, ராஜஸ்தான், ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் தலா 9 போட்டிகளில் 5 வெற்றிகளையும் பெற்றிருப்பதால் இந்த சீசன் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால் நீயா நானா என்ற போட்டியில் பரம எதிரி அணிகளான சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் பலப்பரீட்சை செய்கின்றன.
இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச சிஎஸ்கே அணி:
டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னெர், தீபக் சாஹர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நெஹால் வதேரா, ரித்திக் ஷோகீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால்..