இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமல்லாது வெளிநாட்டு கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னரும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியா 75வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடிவருகிறது. சுதந்திர தினத்தையொட்டி இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 9வது முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார். 

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், நாட்டு மக்கள் அனைவரும் வீட்டு வாசலில் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் வீட்டு வாசலில் தேசிய கொடியை ஏற்றினர்.

இதையும் படிங்க - ஒரு இடம் தான் இருக்கு.. இந்திய டி20 அணியில் தினேஷ் கார்த்திக்கிடம் இடத்தை இழக்கும் ரிஷப் பண்ட்..?

ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் வீட்டு வாசலில் கொடியேற்றியதுடன், சமூக வலைதள ப்ரொஃபைல் படத்தையும் தேசிய கொடியாக மாற்றி சுதந்திர தின வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க - ZIM vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் புதிய 3ம் வரிசை வீரர்..! தரமான சாய்ஸ்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஷிகர் தவான், முகமது கைஃப், விவிஎஸ் லக்‌ஷ்மண், வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துகளை டுவிட்டரில் பதிவிட்டனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னரும் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுதந்திர தின வாழ்த்துகள் என்று வார்னர் தெரிவித்துள்ளார்.

View post on Instagram