ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஐபிஎல் வீர்ரகள் – யார் யார் தெரியுமா?
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பட்டியலில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பாவனா, ஆர் ஜே பாலாஜி, முத்துராமன் ஆகியோர் உள்பட 13 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சிஎஸ்கே அணியின் கோட்டையான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்சிபி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியான நிலையில் எஞ்சிய போட்டிகள் துபாயில் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இந்தியாவில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல் தேதியானது இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
மேலும் தேர்தலின் போது போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் நிலையில் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து முறையான அறிவிப்பு இன்று மாலையோ அல்லது நாளை காலையோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்யும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலும், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், குஜராத்தி, பெங்கால் உள்ளிட்ட மொழிகளில் வர்ணனை செய்யும் வர்ணனையாளர்களின் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழில் வர்ணனை செய்யும் வர்ணனையாளர்களின் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரரான முருகன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற நாராயண் ஜெகதீசனும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்.
இவர்கள் தவிர, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சுப்ரமணியம் பத்ரிநாத், லக்ஷ்மிபதி பாலாஜி, முரளி விஜய், ஆர்ஜே பாலாஜி, யோ மகேஷ், முத்துராமன், கே வி சத்தியநாராயணன், திருஷ் காமினி, பாவனா பாலகிருஷ்ணன், சஷ்திகா ராஜேந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆங்கிலம்:
சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, பிரையன் லாரா, மேத்யூ ஹைடன், கெவின் பீட்டர்சன், மைக்கேல் கிளார்க், சஞ்சய் மஞ்ச்ரேகர், ஆரோன் பின்ச், இயான் பிஷப், நிக் நைட், சிமோன் கடிச், டேனி மோரிசன், கிறிஸ் மோரிஸ், சாமுவேல் பத்ரி, கேட் மார்டின், கிரீம் ஸ்வான், தீப் தேஷ்குப்தா, ஹர்சா போக்லே, அஞ்சும் சோப்ரா, முரளி கார்த்திக், ரோகன் கவாஸ்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தெலுங்கு கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பட்டியலில் அம்பத்தி ராயுடு, மித்தாலி ராஜ், எம்.எஸ்.கே பிரசாத், வேணுகோபால் ராவ் ஆகியோர் உள்பட பலர் இடம் பெற்றுள்ளனர். இந்த வர்ணையாளர்களின் பட்டியலில் 20 ஐபிஎல் சாம்பியன்கள், 9 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வின்னர்ஸ், 13 பயிற்சியாளர்கள், 7 ஒளிபரப்பு அறிமுகம், 11 மகளிர் வீராங்கனைகள், 12 முன்னாள் தேசிய அணி கேப்டன்கள், 9 டி20 உலகக் கோப்பை வின்னர்ஸ் என்று அனைத்து மொழிகளிலும் 80க்கும் அதிகமான வர்ணனையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.