Asianet News TamilAsianet News Tamil

BBL: காலின் முன்ரோவின் சதமும் போச்சு; மேட்ச்சும் போச்சு! கடைசி ஓவரில் பிரிஸ்பேனை வீழ்த்தி சிட்னி தண்டர் வெற்றி

பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டருக்கு எதிரான போட்டியில் காலின் முன்ரோ கடுமையாக போராடியும் கடைசி ஓவரில் 98 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி தோல்வியை தழுவியது.
 

colin munro missed his century and sydney thunder beat brisbane heat by 11 runs in big bash league match
Author
First Published Dec 29, 2022, 5:12 PM IST

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகீறது. குயின்ஸ்லாந்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

பிரிஸ்பேன் ஹீட் அணி:

மேக்ஸ் பிரயண்ட், காலின் முன்ரோ, மேட் ரென்ஷா, சாம் பில்லிங்ஸ், ஜிம்மி பியர்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோஸ் ஒயிட்லி, மைக்கேல் நெசெர், ஜேம்ஸ் பேஸ்லி, மார்க் ஸ்டீகெட்டீ, மேத்யூ குன்னெமேன், மிட்செல் ஸ்வெப்சன்.

ICC WTC புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு பின்தங்கிய தென்னாப்பிரிக்கா..! இந்தியாவின் ஃபைனல் வாய்ப்பு வலுவானது

சிட்னி தண்டர் அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், மேத்யூ கில்க்ஸ் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, ஆலிவர் டேவிஸ், டேனியல் சாம்ஸ், அலெக்ஸ் ரோஸ், நேதன் மெக் ஆண்ட்ரூ, கிறிஸ் க்ரீன் (கேப்டன்), குரிந்தர் சந்து, பிரெண்டன் டாக்கெட், உஸ்மான் காதிர்.

முதலில் பேட்டிங்  ஆடிய சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் மேத்யூ கில்ஸ் 37 ரன்களும், ரைலீ ரூசோ 39 ரன்களும் அடித்தனர். அலெக்ஸ் ரோஸ் 12 பந்தில் 25 ரன்கள் அடிக்க, டேனியல் சாம்ஸ் காட்டடி அடித்து 15 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 36 ரன்களை விளாச, 20 ஓவரில் 182 ரன்களை குவித்தது சிட்னி தண்டர் அணி.

183 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் ஹீட் அணியில், தொடக்க வீரர் காலின் முன்ரோ மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஒருமுனையில் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வீரர்கள் அவுட்டாக, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய காலின் முன்ரோ சதத்தை நெருங்க, கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

கடைசி ஓவரின் முதல் பந்து நோ பால். ஆனால் அதில் முன்ரோ ஒரு ரன் மட்டுமே அடித்தார். ரீபால் வீசப்பட்ட முதல் பந்தில் மைக்கேல் நெசெர் ஒரு ரன் அடித்தார். 98 ரன்களுடன் தனது சதத்தை நெருங்கியது மட்டுமல்லாது, பிரிஸ்பேன் ஹீட்டின் வெற்றிக்கும் நம்பிக்கையளித்த முன்ரோ, 2வது பந்தில் ஆட்டமிழந்து இரண்டையுமே தவறவிட்டார். 98 ரன்களுக்கு முன்ரோ ஆட்டமிழந்து சதத்தை தவறவிட, பிரிஸ்பேன் ஹீட் அணி அதன்பின்னர் எஞ்சிய 4 பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்து 2 விக்கெட்டையும் இழந்தது.

அதனால் 20 ஓவரில் 171 ரன்கள் அடித்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பிரிஸ்பேன் ஹீட் அணி. தனி ஒருவனாக பிரிஸ்பேன் ஹீட் அணியின் வெற்றிக்காக போராடிய காலின் முன்ரோ 53 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 98 ரன்களை குவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios