இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான மூன்று விதமான அணிகளும் இன்று அறிவிக்கப்பட்டது. தேர்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் எம்.எஸ்.கே.பிரசாத் இந்திய அணியை அறிவித்தார். 

ஒருநாள் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெறும் 19 வயதே ஆன ஷுப்மன் கில், சூழலுக்கு ஏற்றவாறு முதிர்ச்சியுடன் ஆடுகிறார். வெஸ்ட் இண்டீஸில் நடந்துவரும் தொடரில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஏ அணிக்காக ஆடிவருகிறார். 

நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்டுள்ள ஷுப்மன் கில், இளம் வயதிலேயே முதிர்ச்சியுடன் ஆடுகிறார். ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். உலக கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்தில் நடந்த தொடரில் கில் ஆடினார். அந்த தொடரில் அவர் சரியாக ஆடவில்லை. அந்த தொடரில் அவர் சரியாக ஆடவில்லை என்றாலும், அதன்பின்னர் ஐபிஎல் மற்றும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடினார். 

எனவே அவருக்கு அணியில் இடம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய ஒருநாள் அணியில் மிடில் ஆர்டரில் சிக்கல் இருக்கும் நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில் மனீஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியில் இடம்பிடித்தனர். கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், கேஎல் ராகுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்ததால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது ராகுல் அணியில் உள்ளார். கில் நன்றாக ஆடிவருகிறார். ஆனால் ராகுல் அணியில் இடம்பெற்றிருப்பதால் கில்லுக்கு வாய்ப்பு வழங்கமுடியவில்லை. அவர் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளார் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.