Asianet News TamilAsianet News Tamil

ஒரே தொடரில் 3வது சதம் அடித்து மிரட்டிய புஜாரா..! இங்கிலாந்தில் அடி வெளுத்துவாங்கும் புஜாரா

இங்கிலாந்தில் நடந்துவரும் உள்நாட்டு ராயல் லண்டன்  ஒருநாள் கோப்பை தொடரில் 3வது சதமடித்து மிரட்டியுள்ளார் புஜாரா.
 

cheteshwar pujara hits third century in royal london one day cup 2022
Author
London, First Published Aug 23, 2022, 10:09 PM IST

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் மற்றும் நட்சத்திர வீரர் புஜாரா. இந்தியாவிற்காக 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6792 ரன்களை குவித்துள்ளார் புஜாரா.

இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட் என்ற மிகப்பெரிய ஜாம்பவானின் இடத்தை நிரப்பியவர் புஜாரா. இந்தியா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து என உலகம் முழுதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் தூணாக நின்று இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தவர் புஜாரா.

இதையும் படிங்க - ரோஹித், கோலி, ராகுல்லாம் இல்ல.. அந்த பையன் தான் டேஞ்சரஸ் பிளேயர்.. பாகிஸ்தானை எச்சரிக்கும் வாசிம் அக்ரம்

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தாலும், இந்தியாவிற்காக வெறும் 4 ஒருநாள்  போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் புஜாரா. 

பொதுவாகவே மிகவும் மெதுவாக ஆடக்கூடியவர் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக ஆடுவதால் அவரது இயல்பான பேட்டிங் ஸ்டைலே தடுப்பாட்டம் தான். அதுமட்டுமல்லாது இயல்பாகவே அவர் மிகவும் மெதுவாக ஆடக்கூடியவர். அதனாலேயே அவர் இந்திய அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிதாக ஆடவேயில்லை.  அதனால் ஐபிஎல்லிலும் அவர் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக ஆடாததால் இந்திய டெஸ்ட் அணியிலும் இடத்தை இழந்த புஜாரா, இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் அபாரமாக பேட்டிங் ஆடி சதங்களை குவித்து, மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். 

இந்நிலையில், இங்கிலாந்தில் இப்போது நடந்துவரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை தொடரில் சசெக்ஸ் அணிக்காக ஆடிவரும் புஜாரா மொத்தம் 3 சதமடித்துள்ளார். 

சசெக்ஸ் அணிக்காக ஆடிவரும் புஜாரா, இந்த தொடரில் வார்விக்‌ஷைர் அணிக்கு எதிராக 79 பந்தில் 107 ரன்களையும், சர்ரே அணிக்கு எதிராக 174 ரன்களையும் குவித்தார். இதுதான் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புஜாராவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இதையும் படிங்க - விராட் கோலியின் மோசமான ஃபார்ம்.. விமர்சிப்பவர்களின் வாயை அடைத்த ரவி சாஸ்திரி

இந்நிலையில், இன்று மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக சசெக்ஸ் அணி ஆடிவரும் போட்டியில் 3வது சதத்தை அடித்தார் புஜாரா. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சசெக்ஸ் அணியில் தொடக்க வீரர் அல்சாப் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சதமடித்தனர். அல்சாப் 189 ரன்களை குவித்தார். அதிரடியாக  ஆடிய புஜாரா 90 பந்தில் 132 ரன்களை குவித்தார். இவர்கள் இருவரின் அதிரடி சதத்தால் 50 ஓவரில் சசெக்ஸ் அணி 400 ரன்களை குவித்தது.

புஜாரா தொடர்ந்து சதங்களாக விளாசி கொண்டிருக்க, அவரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்துதள்ளிவருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios