6ஆவது போட்டியிலும் தோற்ற பா11சி திருச்சி அணி: சிலம்பரசன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!
பா11சி திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் பா11சி திருச்சி அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற பா11சி திருச்சி அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த சிபி 31 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சசிதேவ் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 129 ரன்கள் எடுத்தது.
உலகக் கோப்பையில் இலங்கை எதிர்கொள்ளும் அணிகள் என்னென்ன?
பின்னர் எளிய இலக்கை துரத்திய பா11சி திருச்சி அணியில் டேரில் பெர்ராரியோ அதிகபட்சமாக 45 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் 1, 1, 0, 0, 0, 7, 9, என்று சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக பா11சி திருச்சி அணி 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 71 ரன்கள் மட்டுமே எடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக விளையாடிய 6ஆவது போட்டியிலும் பா11சி திருச்சி அணி தோல்வி அடைந்துள்ளது.
போராடி தோற்ற சீகம் மதுரை பாந்தர்ஸ்; லைகா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
பந்து வீச்சு தரப்பில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் எம் சிலம்பரசன் 3 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளும், ஹரிஷ் குமார், பாபா அபராஜித், ராஹில் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ஆட்டம் காட்டிய சுரேஷ் குமார், ஷாருக்கான்: லைகா கோவை கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு!