ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெடுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது. இதில், கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 35 ரன்களும், விராட் கோலி 21 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38* ரன்களும், அனுஷ் ராவத் 48 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கை பொறுத்த வரையில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இதைத் தொடர்ந்து 174 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. இதில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களில் வெளியேற ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அஜின்க்யா ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழக்க, டேரில் மிட்செல் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது முஷ்தாபிஜூ ரஹ்மானுக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக வந்த ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து கடைசி வரை விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர். இதில், ஷிவம் துபே 28 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 38* ரன்களும், ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் ஒரு சிக்ஸர் உள்பட 25* ரன்களும் எடுத்தனர். இறுதியாக சிஎஸ்கே அணியானது 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக அவதாரம் எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் தோற்ற போதிலும் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும், கடந்த 16 ஆண்டுகள் சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கடைசியாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்பிசி வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…