Asianet News TamilAsianet News Tamil

அவரு எங்கள் அணியின் மிகச்சிறந்த சொத்து.. உலக கோப்பை அணியில் அவரை பெற்றது மிக்க மகிழ்ச்சி - கேப்டன் கோலி

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 
 

captain virat kohli happy to get vijay shankar in world cup squad
Author
India, First Published Apr 19, 2019, 11:08 AM IST

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

captain virat kohli happy to get vijay shankar in world cup squad

நான்காம் வரிசைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்தது. ஆனால் கடைசி இரண்டு மாதங்களில் சிறப்பாக ஆடி நான்காம் இடத்தை பிடித்துவிட்டார் விஜய் சங்கர். விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நிதானமாக சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் ஆடும் அதேவேளையில், சில பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் ஃபீல்டிங்கும் சிறப்பாக செய்வதாலும் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

captain virat kohli happy to get vijay shankar in world cup squad

உலக கோப்பை அணியில் ராயுடுவை புறக்கணித்தது குறித்த வருத்தத்தை காம்பீர் உட்பட பல முன்னாள் வீரர்கள் வெளிப்படுத்தினர். ஆனாலும் தற்போதைக்கு யார் ஃபார்மில் இருப்பது, அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும் வீரர் யார் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் வீரர்களை தேர்வு செய்ய முடியும். அந்தவகையில், விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு அணியில் இடம் கிடைத்தது. 

captain virat kohli happy to get vijay shankar in world cup squad

ராயுடு புறக்கணிக்கப்பட்டது குறித்த விவாதங்கள் நடந்துவரும் நிலையில், விஜய் சங்கருக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். விஜய் சங்கர் தேர்வு குறித்து பேசிய கேப்டன் கோலி, விஜய் சங்கர் இந்திய அணியில் சிறப்பாக ஆடியுள்ளார். அவரை உலக கோப்பை அணியில் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று விஜய் சங்கர் இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த வரப்பிரசாதம் என்கிற ரீதியாக கருத்து தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios