Asianet News TamilAsianet News Tamil

#KKRvsRCB தலைசிறந்த பேட்ஸ்மேன்களை எங்கள் பவுலர்கள் தலைதெறிக்க ஓடவிட்டனர்.. கேகேஆர் கேப்டன் மோர்கன் பெருமிதம்.!

இந்த நாள் எங்களுக்கு மிகச் சரியான துவக்கத்தை தந்துள்ளது. குறிப்பாக எங்கள் அணியின் பவுலர்களுக்கு இது மிகச் சிறப்பான நாள். மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், விராட் கோஹ்லி என தலைசிறந்த பேட்ஸ்மேன்களை எங்கள் பவுலர்கள், வீழ்த்தியிருக்கின்றனர். இது அரிதான மற்றும் அற்புதமான விஷயம்.

Captain eoin morgan proud of kkr bowlers superb performance against world class batsmen in kkr vs rcb match in ipl 2021
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Sep 21, 2021, 5:33 PM IST

பலம் வாய்ந்த பெங்களூரு அணியை வீழத்தியதை அடுத்து நாங்கள் தொடர்ந்து விளையாடினால், எந்த அணிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி விடுவோம் என்பதை உணர்த்தியிருக்கிறோம் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். 

ஐ.பி.எல் 14-வது சீசனின் 31-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீட்டு கட்டு போல் மளமளவென அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெங்களூரு அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் வருண் சக்ரவரத்தி, ரஸல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 

Captain eoin morgan proud of kkr bowlers superb performance against world class batsmen in kkr vs rcb match in ipl 2021

இதையடுத்து 93 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில், அறிமுக வீரராக வெங்கடேஷ் அய்யர் களமிறங்கினர். இருவரும் நிதானமாவும் அதிரடியாகவும் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டனர். விக்கெட் இழப்பின்றி வெற்றியை நெருங்கிய நிலையில் ஷுப்மன் கில்  48 ரன் எடுத்திருந்தபோது, சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரூ ரஸல் களமிறங்கினார். இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெங்கடேஷ் அய்யர் 27 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

Captain eoin morgan proud of kkr bowlers superb performance against world class batsmen in kkr vs rcb match in ipl 2021

போட்டி முடிந்த பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில்;- இந்த நாள் எங்களுக்கு மிகச் சரியான  துவக்கத்தை தந்துள்ளது. குறிப்பாக எங்கள் அணியின் பவுலர்களுக்கு இது மிகச் சிறப்பான நாள். மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், விராட் கோஹ்லி என தலைசிறந்த பேட்ஸ்மேன்களை எங்கள் பவுலர்கள், வீழ்த்தியிருக்கின்றனர். இது அரிதான மற்றும் அற்புதமான விஷயம்.

Captain eoin morgan proud of kkr bowlers superb performance against world class batsmen in kkr vs rcb match in ipl 2021

இருப்பினும் இந்த தொடரில் நாங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்றே கூற வேண்டும். இதே போல் நாங்கள் தொடர்ந்து விளையாடினால், எந்த அணிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி விடுவோம் என்பதை உணர்த்தியிருக்கிறோம் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios