இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வெற்றி நாயகனாகவும் திகழும் பும்ரா, ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிவிட்டார். 

உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிராக நடந்துவரும் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் இருவரையுமே பும்ரா வீழ்த்தினார். 

தனது பவுலிங்கில் ஒரு ரன்னை கூட அடிக்கவிடாமல் கருணரத்னேவுக்கு நெருக்கடியை கொடுத்த பும்ரா, அவரது விக்கெட்டை தனது இரண்டாவது ஓவரில் வீழ்த்தினார். ஒருநாள் போட்டியில் இது பும்ராவின்ன் 100வது விக்கெட். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் குசால் பெரேராவையும் பும்ரா வீழ்த்தினார். 

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் மிக விரைவில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முகமது ஷமிக்கு(56 போட்டிகள்) அடுத்த இரண்டாவது இடத்தை பும்ரா பிடித்துள்ளார். பும்ரா 57வது போட்டியில் தனது 100வது விக்கெட்டை எடுத்துள்ளார். இதன்மூலம் இர்ஃபான் பதான்(59 போட்டிகள்), ஜாகீர் கான்(65 போட்டிகள்) ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்த பட்டியலில் பும்ரா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஆனால் ஷமி சாதனையை முறியடிக்க முடியவில்லை.