IPL 2023: வேற லெவல்யா நீ.. சந்தீப் ஷர்மாவுக்கு பிரெட் லீ புகழாரம்
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் கடைசி போட்டியில் கடைசி ஓவரில் தோனி களத்தில் நின்றபோது அவரை அடித்து ஆடவிடாமல் கட்டுப்படுத்திய சந்தீப் ஷர்மாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் பிரெட் லீ.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் நன்றாக ஆடிவரும் சிஎஸ்கே அணி, முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஸ் பட்லரின் அதிரடி அரைசதம்(52) மற்றும் தேவ்தத் படிக்கல்(38), அஷ்வின் (30), ஹெட்மயர்(30) ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவரில் 175 ரன்கள் அடித்தது.
176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் கடைசியில் சிக்ஸர்களாக விளாசி கடுமையாக போராடிய போதிலும் 20 ஓவரில் 172 ரன்கள் அடித்து 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 17 பந்தில் 32 ரன்கள் அடித்து தோனி கடைசிவரை போராடியபோதிலும் சிஎஸ்கே அணியால் ஜெயிக்க முடியவில்லை.
IPL 2023: வாயை கொடுத்து வாங்கி கட்டிய அஷ்வின்..! ஆப்பு அடித்த ஐபிஎல் நிர்வாகம்
கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை தோனிக்கு 2முறை வைடாக வீசிய சந்தீப் ஷர்மா, அடுத்து வீசிய ரீபாலில் தோனி ரன் அடிக்கவில்லை. ஆனால் 2 மற்றும் 3வது பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசினார். அந்த 2 பந்துகளையும் யார்க்கராக வீச நினைத்து சந்தீப் ஷர்மா மிஸ் செய்ததால் ஃபுல் டாஸாக சென்றது. அதனால் அந்த 2 பந்தையும் தோனி சிக்ஸர் அடிக்க, கடைசி 3 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அதன்பின்னர் கடைசி 3 பந்தில் 3 சிங்கிள் மட்டுமே கொடுத்து கட்டுப்படுத்தினார் சந்தீப் ஷர்மா. அதனால் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் ஜெயித்தது.
2 சிக்ஸர்கள் அடித்த தோனியை அதன்பின்னர் 2 பந்தில் 2 சிங்கிள் மட்டுமே கொடுத்து கட்டுப்படுத்தியது குறித்து பேசிய சந்தீப் ஷர்மா, எனது பலமே யார்க்கர்கள் தான். வலைப்பயிற்சியில் அதிகமான யார்க்கர்களை வீசித்தான் பயிற்சி செய்வேன். அதனால் எனது பலத்தின் மீது நம்பிக்கை வைத்து தோனியின் கால்களை நோக்கி யார்க்கர் வீச முயற்சித்தேன். ஆனால் அந்த 2 பந்துகளும் யார்க்கர் மிஸ் ஆகி ஃபுல் டாஸாக விழுந்தன. அதில் 2 சிக்ஸர்கள் அடித்துவிட்டார். அதனால் அரௌண்ட் தி விக்கெட் வந்து ஆங்கிலை மாற்ற முயற்சித்தேன். அந்த முயற்சி எனக்கு பலனளித்தது என்றார் சந்தீப் ஷர்மா.
IPL 2023: முழங்கால் காயத்தால் அவதிப்படும் தோனி..! தென்னாப்பிரிக்க வீரர் 2 வாரம் விலகல்
சந்தீப் ஷர்மாவை பாராட்டி பேசிய பிரெட் லீ, போட்டி முடிந்த பின் சந்தீப் ஷர்மா பேசியதை நான் மிகவும் ரசித்தேன். ஓவர் தி விக்கெட்டில் வீசியது சரியாக இல்லை. அதனால் அரௌண்ட் தி விக்கெட்டில் வந்து வீசினேன் என்று கூறினார். அது உண்மை தான். அந்த பந்தும் ஒரு இன்ச் தவறியிருந்தால் மீண்டும் சிக்ஸருக்கு பந்து பறந்திருக்கும். செம டச்சில் இருந்த தோனிக்கு ஈரமான பந்தில் வீசினார் சந்தீப் ஷர்மா. மேலும் மொத்த ரசிகர் பட்டாளமும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கேவிற்கு ஆதரவாக முழக்கமிட்டனர். அப்பேர்ப்பட்ட அழுத்தத்தில் தோனிக்கு பந்துவீசுவது எளிதல்ல. முழு கிரெடிட்டும் சந்தீப் ஷர்மாவுக்குத்தான் என்றார் பிரெட் லீ.