இன்ஸ்டாவிலிருந்து கிரிக்கெட்டர் வார்த்தையை நீக்கிய புவனேஷ்வர்குமார்!
இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து கிரிக்கெட்டர் என்ற வார்த்தையை நீக்கியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பிறந்து வளர்ந்தவர் புவனேஷ்வகுமார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார். 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.
அனில் கும்ப்ளே, கபில் தேவ் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!
இதுவரையில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புவனேஷ்வர்குமார் 63 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதே போன்று 121 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 77 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 84 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு ஒரு சர்வதேச போட்டிகளில் கூட அவர் இடம் பெறவில்லை.
சூர்யகுமார் யாதவ்விற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடினார். ஒரு சில போட்டிகளில் அந்த அணியின் கேப்டனாகவும் இருந்தார். இந்த நிலையில், அவர் இந்திய அணியில் இடம் பெறாத நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புவனேஷ்வர்குமார் இந்தியன் கிரிக்கெட்டர் என்பதில் கிரிக்கெட்டர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்.
இதன் மூலமாக புவனேஷ்வர்குமார் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற உள்ளார் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்திய அணியில் அடுத்தடுத்து வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்ற நிலையில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் அவர் இந்த முடிவு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.