சூர்யகுமார் யாதவ்விற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் சூர்யகுமார் யாதவ். மிஸ்டர் 360 டிகிரி என்றும் அழைக்கப்படுகிறார். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 117 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் சூர்யகுமார் யாதவ், ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு ஒரு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும் தொடர்ந்து ஹாட்ரிக் டக் அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார். இந்த நிலையில், தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றார். நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் பிளேயிங் 11ல் இடம் பெற்று விளையாடினார். ஆனால், இந்தப் போட்டியில் அவர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால், ஒரு நாள் போட்டிக்கு சூர்யகுமார் யாதவ் சரிப்பட்டு வரமாட்டார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுவரையில் 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 2 அரை சதங்கள் உள்பட 452 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், சஞ்சு சாம்சன் 11 போட்டிகளில் விளையாடி 330 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 86 (நாட் அவுட்) ரன்கள் எடுத்துள்ளார்.
WI vs IND 1st ODI: 7ஆவது இடத்தில் இறங்க என்ன காரணம்? ரோகித் சர்மா விளக்கம்!
சஞ்சு சாம்சன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்ற நிலையில், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முதல் ஒரு நாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்று விளையாடினார். அவர் 19 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அப்படியிருக்கும் போது, ஆகாஷ் சோப்ரா, சூர்யகுமார் யாதவ் பற்றி விமர்சனம் செய்துள்ளார். அவர், ஒரு நாள் போட்டிகளை டி20 போட்டியைப் போன்று அணுகி வருகிறார். குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில், அவருக்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட போதுமான அனுபவமில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.